நாய் கடிக்கும் கனவு, தூக்கத்தில் நாம் தினமும் பலவிதமான நிறைய கனவுகளை காண்கிறோம். நாம் இரவில் 40க்கு மேற்பட்ட கனவுகளை காண்கிறோம் என்று அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றன. அதில் நமக்கு 90 சதவீதம் கனவுகள் காலையில் நியாபகம் இருப்பதில்லை. அத்தகைய கனவுகள் நம்மோடு வாழ்க்கையுடன் தொடர்புடையது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. கனவுகள் நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் போகும் விஷயத்தை முன்கூட்டியாக அறிய வைப்பதற்காக வருவதாக சொல்லப்படுகிறது.
நாய் கடிக்கும் கனவு கண்டால் என்ன அர்த்தம்:
மனிதர்களின் நண்பனாக விளங்கும் உயிரினம் தான் நாய்கள். வீட்டின் பாதுகாப்பிற்காக நாம் அதை வளர்க்கிறோம். நிறைய பேர் நாய் குட்டிகளை, பாசம் மற்றும் அதன் மீது கொண்ட பேரன்பினாலும் வாங்கி வாங்கி வளர்த்து வருகின்றன. இருந்தாலும் உங்களுக்கு நாய் பிடிக்கும் என்றே வைத்துக் கொள்வோம். இருந்தாலும் நாய் கடிப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்? அது உங்களை எச்சரிக்கும், கனவாகும். நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு ஆபத்து வரப்போகுது என்பதை முன்கூட்டியே உங்களுடைய ஆழ்மனது உணர்த்தும் அறிகுறி ஆகும். அனைத்து செயல்களிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல உறவையும் நட்பையும் அனைவரிடமும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாய் துரத்துவது போல கனவு காண்பது நல்லதா?
கனவில் நாய் துரத்துவது போல் வந்தால், உங்களோட உறவுகளுடன் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், ரொம்ப நெருங்கிய ஒருவர் உங்களை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு செல்வதற்கான அறிகுறி ஆகும். அவர்களால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம். உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு நீங்கள் ஏதேனும் பிடிக்காத செயல்களை செய்திருக்கலாம். அதனால் அவர்கள் உங்கள் மீது கோபத்தில் அல்லது ஆத்திரத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
வீட்டுக்குள் நாய் வந்தால் என்ன ?
உங்கள் வீட்டிற்குள், நீங்கள் வளக்காத மற்றவர்களின் நாய் வந்தால் அவர் உங்களை தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தம். சில உரிமைகளாக தங்களுடைய நாய்களை மோசமான சூழ்நிலைகள் கைவிடப்படுகின்றன அந்த நாய்கள் அங்கும் இங்கும் தண்ணீர்காகவும், உணவுக்காகவும், பாதுகாப்புக்காகவும், உங்கள் வீட்டை நாடலாம்.
நாய் இறப்பது போல் கனவு ?
நம் கனவில் நாய் இறப்பது போல் வந்தால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இழப்பு மற்றும் துயரத்தின் உணர்வுகளை தெரியப்படுத்தலாம். சில நேரங்களில் இதுபோல கனவுகள் உங்களுக்கு அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கோ உடல்நலம் பற்றிய கவலைகளையும் கூறுகிறது. அதுவே நீங்க செல்ல பிராணியாக வளர்த்த நாய் கனவில் வந்தால் அந்த நாய் மீது நீங்க வைத்திருந்த பாசத்தையும் உங்களுக்கும் இந்த உலகத்திற்கும் பிரிய முடியாத பந்தத்தையும் நினைவுபடுத்துகிறது. உலகை விட்டு சென்றாலும் அந்த நாய் உங்கள் மீது அன்போடும் விசுவாசமாகவும் இருக்கிறது என்பதையும் காட்டுகிறது.
இரவில் நாய்கள் குறைப்பது ஊளை இடுவது ஏன்?
நாய்கள் ஊளை இடுவது அல்லது குறைப்பது மனிதர்களுடன் அல்லது மற்ற நாய்களுடன் தொடர்பு கொள்ள அழைக்கிறது. இது சலிப்பு மற்றும் பிரிவினை கவலையை குறிக்கும். நாய் தனிமையில் அல்லது ஏதேனும் பிரிந்துவிட்ட கவலையில் அவதிப்பட்டால், அவை இரவு நேரங்களில் சினுங்களும், குறைப்பதும், ஊளையிடுதல் இது போன்ற நிகழ்வு நடக்கும். நாய்களின் உரிமையாளர்கள் நாய்களின் நுணுக்கத்தையும் நடத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாய் அழுதால் என்ன நடக்கும்?
எந்த ஒரு விஷயம் நாய் அழுவது மோசமான அறிகுறி பட்டியலில் சேர்க்கப்படுகிறது. நாய் அழுவது நமக்கு வரப் போகும் பிரச்சனையை முன்கூட்டியே உணர்த்துவதாக நம்பப்படுகிறது. நீங்கள் வளர்க்கும் நாயே இல்லன்னா தெருவில் வளரும் நாயோ உங்கள் வீட்டில் முன் இரவு நேரங்களில் அழுவது யாராவது உங்கள் குடும்பங்களில் பெரிய நோயால் பாதிக்கப்பட போகிறார்கள் என்பதன் அறிகுறி ஆகும். இவ்வாறு நாய் இரவு நேரங்களில் அழுவது குடும்பத்தில் ஏதேனும் உயிரிழப்பை கூட ஏற்படும் என நம்பப்படுகிறது. இயற்கையினால் நிகழும் சீற்றங்கள் நிலநடுக்கங்கள் போன்றவற்றையெல்லாம் நாய்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறமை கொண்டவை. எனவே, நாய் அழுதால் சிறிது நேரம் வீட்டிலேயே காத்திருந்து வெளியே செல்லுங்கள். சற்று எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.