பாம்பு வந்தால் என்ன காரணம்? | Bambu varamal irukka chedigal tamil | stvk.in

பாம்பு வந்தால் என்ன காரணம்? | Bambu varamal irukka chedigal tamil | stvk.in

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் அப்படின்னு சொல்லுவோம். மழைக்காலம் தொடங்கினாள் வீடுகளை நோக்கி பாம்புகள் படையெடுக்கும். தொடர்ந்து அதிக அளவு மழை பெய்தால் அருகில் உள்ள புதர்கள், வயல்கள், காட்டுக்குள் இருந்தும் பாம்புகள் அதிகமாக வரும். இதுபோன்ற சமயங்களில் முதல் தளம், கிரவுண்ட் ப்ளோர், கால்வாய்கள், ஏரிகள், பூங்காக்கள் அருகில் எல்லாம் வீடு வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் துளைகள் வழியாக உங்கள் வீட்டிற்கு எளிமையாக பாம்புகள் ஊர்ந்து செல்லும்.

பாம்புகளுக்கு பிடிக்கும் செடிகள்

பாம்புகளுக்கு பிடிக்கும் செடிகள் பல வகையான மரங்கள் செடிகள் இருக்கின்றன. சிலவகை செடிகளில் இருக்கும் வாசனை பாம்புகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அவை என்னென்ன அப்படின்றதை நம்ம இப்போ பார்ப்போம்.

சந்தன மரம்:

பாம்புகளுக்கு ஒரு சில மரங்கள் முக்கிய உணவாகவும் வீடாகவும் விளங்குகிறது. பாம்புகளின் வாசனை உணர்வு மனிதர்களைதர் காட்டிலும் அதிகமாக இருக்கும். வாசனை அதிகமாக வீசும் சந்தன மரங்கள் இருக்கும் இடங்களில் பாம்புகள் அதிகமாக வாழ்கின்றன.

மல்லிகை பூ செடி

அனைவரும் வீட்டில் பெரும்பாலும் இந்த மல்லிகை செடி இருக்கும். எல்லாருக்கும் மல்லிகை பூ என்றால் பிடிக்கும், அதனால் வளர்த்து வருவார்கள். ஆனால்,பாம்புகளை மல்லிகை செடியை சுற்றி வாழ மிகவும் விரும்புகின்றன. காரணம் இது நிழல் தரும் தாவரமாகவும், அதிகமான நறுமணத்துடன் இருப்பதால், மக்கள் மட்டும் இல்லாமல் பாம்பும் இதை அதிகமாக விரும்புகின்றன. மல்லிப்பூ எல்லாருக்கும் பிடிக்கும் என்றாலும் சில நேரங்களில் அந்த செடியினால் நமக்கு ஆபத்தும் வரலாம். உஷாராக இருங்கள்.

பாம்பு வந்தால் என்ன காரணம்? | Bambu varamal irukka chedigal tamil | stvk.in

க்ளோவர் செடிகள்:

இந்த க்ளோவர் செடியானது தீவன தாவரங்களுக்கு பரவலாக பயிரிடப்படுகிறது. இது தரையில் இருந்து உயரமாக வளராது, மருத்துவ பயன்களுக்கும் இது அதிகமாக பயன்படுகிறது, ஆனால் இது மிகவும் அடர்த்தியாக வளரக்கூடியவை என்பதால் பாம்புகள் எளிதில் இந்த செடிக்குள் ஒளிந்து கொண்டு ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இதோட வேர் பகுதி ரொம்ப குளிர்ச்சியாக இருக்கும். இதனால் பாம்புகள் அதிகமாக விரும்புகின்றன.

எலுமிச்சை செடிகள்:

அனைவரும் வீட்டிலும் இந்த எலுமிச்சை செடிகள் இருக்கும். பாம்புகளுக்கு இந்த எலுமிச்சை மரம் மிகவும் பிடிக்கும். அப்போ எலுமிச்சை பழம் பாம்பு சாப்பிடுமானு கேட்டா அதான் இல்ல, ஆனால் எலுமிச்சைபழம் பூச்சிகள், பறவைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அதன் வாசனைகள் ஒரு சில உயிரினங்கள் அங்கு தங்குகின்றன. இதனை கண்ட பாம்புகள் பூச்சிகள் மற்றும் பறவைகளை வேட்டையாட  அங்கு சுற்றுகின்றன.

பாம்புகள் வராமல் இருக்க என்ன செய்யலாம்?

வீட்டிற்கு தூய்மையாக வைத்துக் கொள்ளவும். வீட்டிலோ வீட்டின் அருகிலோ குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இருந்தால் எலி வரும். எலி வந்தால் அவற்றை தேடி பாம்புகள் நிறைய வரும்.

வீட்டில் இருந்து வரும் கழிவு குழாய்களை வலைபோன்ற கம்பிகளால் மூடி வைக்க வேண்டும். வீடுகளில் ஏதேனும் ஓட்டை இருந்தால் இதை கவனித்து அடைத்து விட வேண்டும்.

பாம்பு வந்தால் என்ன காரணம்? | Bambu varamal irukka chedigal tamil | stvk.in

வீடுகளைச் சுற்றி இரவு நேரங்களில் வெளிச்சமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வெளியே குளியலறை கழிவறை இருந்தால் அவற்றை சுத்தமாகவும் வெளிச்சமாகவும் வைத்திருக்க வேண்டும்.

நம்ம தினதோறும் பயன்படுத்தும் காலணிகள் ஷூக்கள் போன்றவற்றை தரையில் வைக்காமல் உயரமான இடத்தில் வைத்து, தினமும் நன்கு பரிசோதித்து உபயோகப்படுத்த வேண்டும். நம்ம தினமும் பயணம் செய்யும் வாகனத்தை கூட ஒருமுறை நன்கு சோதனை செய்த பின்பு இயக்குவது நல்லது. ஏனென்றால் இப்போது வாகனங்களில் கூட பாம்புகள் தங்கி விடுகின்றன .

பாம்புகள் வராமல் இருக்க மருந்துகள் மற்றும் செடிகள்:

வீட்டுக்குள் பாம்புகள் வராமல் இருக்க, வீட்டினில் இருக்கும் ஜன்னல் மற்றும் கதவுகளில் வெங்காயம் மற்றும் பூண்டின் விழுதை தடவலாம். இதன் வாசனைக்கு வீட்டிற்குள் வராது. காற்றாலை, பாம்பு செடி, துளசி செடி,போன்றவற்றை ஜன்னல் பக்கத்தில் இந்த செடிகளை வைக்க வேண்டும். இது பாம்புகளுக்கு மட்டும் இல்லாமல் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

ப்ளீச்சிங் பவுடர் பாம்புகள் மற்றும் பிற பூச்சிகள் உங்க வீட்டிற்கு வராமல் தடுக்கும். வீட்டிற்கு அருகில் சிறு குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றால், தண்ணீரில் தெளிக்கலாம். வேப்ப எண்ணெய் தினமும் தண்ணீரில் கலந்து, வீட்டுக்குள் வீட்டிற்கு வெளியில் தினமும்  தெளித்து வந்தால் மூட்டை பூச்சிகள் போன்ற பூச்சிகள் வராமல் இருக்கும்.

எலிகள் வீட்டிற்குள்ளும், வீட்டின் பிற இடத்திலும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது இரவில் செல்லும் போது டார்ச் லைட் இல்லாமல் சொல்லக்கூடாது. தோட்டத்தில் வேலை செய்யும்போது நன்கு இடத்தை பரிசோதித்து வேலை செய்ய வேண்டும். சற்று விழிப்புடன் இருங்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *