குட்டி யானை கனவில் வந்தால், என்ன பலன்கள், யானை என்பது காட்டில் வாழும் மிகப்பெரிய ஒரு உயிரினம் ஆகும். யானை மிகவும் முரட்டுத்தனமாகவும் கம்பீரமாகவும் காட்டுக்குள் திரிந்து கொண்டிருக்கும். பல பேர் யானையை கோவிலில் கடவுளாகவும் வழிபட்டு வருகின்றன. யானையை இந்து மதத்தில் விநாயகக் கடவுளின் அம்சமாக பார்க்கின்றன. மிகப்பெரிய பாலூட்டி யானை தான் என்று உலகில் கூறப்படுகிறது. பல பேருக்கு யானையைப் பார்த்தால் வணங்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது இருந்தாலும் சில பேர் யானைக்கு இன்னும் பயந்து கொண்டு தான் இருக்கின்றன. கோயில் திருவிழாக்களில் யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர் பலமாக செல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அது எதுவும் செய்யாது ஆனால் அதுவே காட்டு யானையாக இருந்தால் உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அந்த யானைகள் உங்கள் கனவில் வந்தால் நல்லதா? கெட்டதா, அதற்கான பலன்கள், அது எதற்காக வருகிறது? என்பதை நாம் இந்தப் பதிவில் தெளிவாக பார்ப்போம் தொடர்ந்து படியுங்கள்.
யானை கனவில் வந்தால் என்ன பலன்கள்:
யானைய நேர்ல பார்த்தாலும் நமக்கு பயம் வரும். கனவுல பார்த்தாலும் நமக்கு பயம் வரும். ஆனா யானை வந்து கனவுல ஒரு மாலையிடுவதாக ஒரு கனவு வருதுன்னு வச்சுக்கலாம் உங்களுக்கு அது நல்ல கனவு தான். உங்களுக்கு பதவி உயர்வுகள் வரும். நல்ல வேலை கிடைக்கும். சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும், அல்லது வெற்றியில் ஏதோ ஒன்று கிடைக்கும் அதே மாதிரி அலங்கரிக்கப்பட்ட யானை மேல நீங்க உட்கார்ந்து செல்வதாக கனவு கண்டாலும் பலவிதமான வெற்றிகள் உங்களுக்கு கிடைக்கும்.
ஆனால் யானை உங்களை பின்புறமா துரத்துவது போல் கனவு கண்டால் அந்த கனவு சிறப்பான கனவு அல்ல அந்த கனவு பலவித பிரச்சனைகளை உங்களுக்கு உண்டு பண்ணும். அதே மாதிரி உங்கள் முன்னால யானை வந்து நின்னு அதோட தும்பிக்கையை தூக்குவதாக கனவு கண்டால் அதுவும் நல்ல கனவு. யானை குளிப்பதாக கனவு கண்டால் அதுவும் நல்ல கனவு தான் உங்களுக்கு கஷ்டங்கள் விலகி நல்ல சுப காரியங்கள் நடக்கும். அதே போல ஒரு யானை தன் குட்டையுடன் வருவதாக கனவு கண்டாலும் உங்களுக்கு நல்ல பலன் தான்
குட்டி யானை கனவில் வந்தால்:
வெள்ளை நிற குட்டி யானை கனவில் வந்தால் நீங்கள் உங்கள் அன்பு உறவை குறித்து கவலைப்படவிருப்பதையும் ஆனால் அந்த பிரச்சனை வரும் காலத்தில் தீர்ந்து விட விருப்பத்தையும் நல்ல இறைஞானம் பெற இருப்பதையும் குறிக்கிறது. ஒற்றைக்குட்டி யானை கனவில் வந்தால் நீங்கள் புதிய தொழில் ஒன்றை திட்டமிட்டு தொடங்க இருப்பதையும் அதில் வெற்றி பெற்று பணப்பிரச்சனை சரியாகிவிட இருப்பதையும் குறிக்கிறது. குட்டி யானை அடிபட்டுவிட்டது போல் கனவில் கண்டால் உங்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ வரவிருக்கும் ஆபத்து பற்றியும் கவனமாக இருக்கவும் அறிவுறுத்துகின்றது.
குட்டி யானையை நீங்கள் புறக்கணிப்பது போல் கனவில் கண்டால் உங்களுக்கு என ஒதுக்கும் பொறுப்புகளை சரியாக செய்ய அறிவுறுத்தியும் உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்காக வரும் நல்ல சந்தர்ப்பங்களை ஒதுக்காமல் அதை பயன்படுத்திக் கொள்ள கணவர் அறிவுறுத்துகின்றது. குட்டி யானையை ஆபத்திலிருந்து பாதுகாப்பது போல் கனவில் கண்டால் யாரோ ஒருவர் வாழ்வில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பவருக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுக்க விருப்பத்தை பற்றி குறிக்கிறது.
குட்டி யானை கனவில் வந்தால் உணவளிப்பது போல் கனவில் கண்டால் நீங்கள் பிறரிடம் கோபம் இல்லாமல் அமைதியாக இருக்க அறிவுறுத்தியும் உங்கள் வேலையில் புதிய பொறுப்புகளை சமாளிக்க இருப்பதையும் உங்கள் கடின உழைப்பிற்கு நல்ல வெகுமானம் கிடைக்க இருப்பதையும் குறிக்கிறது. இறந்த குட்டி யானையை கனவில் கண்டால் நீங்கள் உங்கள் குழந்தை பருவத்தில் இருந்து கவலைப்பட்ட ஒன்றிற்கு தீர்வு கிடைக்க விருப்பதையும் சில உங்களை காயப்படுத்திய பழைய நினைவுகளை மனதை விட்டு அகற்றவும் கூறுகிறது.
யானை துரத்துவது போல் கனவு கண்டால்:
துரத்துவது போல் கனவு கண்டால் யானை உங்களை துரத்துவது போல கனவு வருவது நல்லதல்ல. இந்த மாதிரியான கனவு உங்களுக்கு மன சங்கடங்கள் ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும். அது மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையில் புதிதாக ஏதேனும் ஒரு பிரச்சனை வரப்போகிறது என்பதையும் இது உணர்த்துகிறது.
கருப்பு யானை கனவில் வந்தால்:
நீங்க தூங்கும் போது கருப்பு அணையை கனவில் கண்டால் உங்களுக்கு அடுத்து வரும் காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் உங்களுக்கு எதிர்பாலத்தில் ஏதேனும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பிரச்சனை உண்டாகும். கவலை வேண்டாம் சற்று கவனமாக இருந்து எந்த ஒரு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இரட்டை யானையை கனவில் பார்த்தால்:
இரண்டு யானைகள் சண்டையிடுவது போல் கனவில் கண்டால் என்ன பலன் என்பதை அறியலாம் பொதுவாக இரண்டு யானைகள் சண்டையிடுவதை பார்ப்பது போல் கனவில் கண்டால் இதைக் குறிக்கும் என்றால், நீங்கள் மிகுந்த சகிப்புத்தன்மையுடன் இருக்கவருப்பதையும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உங்கள் காரியங்களை ஆர்வமுடன் செய்ய இருப்பதை குறிக்கிறது.
ஏதோ ஒன்றில் உண்மையை நீங்கள் அறிந்து கொள்ள விருப்பத்தையும் உங்கள் எண்ணத்தை தெளிவுபடுத்த அறிவுறுத்தியும் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று கூறுகிறது. அமைதியான வாழ்வு புகழ் வெற்றி நீண்ட ஆயுள் பற்றியும், அன்பான நட்புறவுகள் கிடைக்க இருப்பதையும் கூறுகிறது.
கோவில் யானை கனவில் வந்தால்:
உங்கள் முயற்சிகளில் வந்த இடையூறுகள் எல்லாமே நீங்கி எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். சவாரி செல்வது போல் நீங்க கனவு கண்டீங்கன்னா உங்களுக்கு அந்த வேலைக்காக முயற்சி பண்ணிட்டு இருக்கீங்களா அந்த வேலை உங்களுக்கு கிடைக்கும் நீங்க ஒரு அரசாங்க வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கீங்களா உங்களுக்கு அது 100% கிடைக்கும். உங்கள் மற்றும் உங்க குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.