உடலில் உள்ள நரம்புகள் இழுத்தல், மனித உடலில் நரம்புகள் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் முழுவதும் தகவல் தொடர்புகளை நரம்புகள் தான் கட்டுப்படுத்துகிறது தலை முதல் கால் வரை அனைத்து இடங்களிலும் நரம்புகள் நிறைந்துள்ளன. உடலில் உள்ள நிலையான செயல்பாட்டிற்கும், உணர்வு உறுப்புகள், முகங்கள், கை கால் ஆகிய உறுப்புகளுக்கு ஆரோக்கியமான உடலுக்கும் நரம்பு மண்டலம் மிகவும் இன்றியமையாதது. அப்படிப்பட்ட நரம்புகளில் ஏதேனும் நமக்கே தெரியாமல் சேதம் ஏற்பட்டாலோ, இல்லை செயல் இழந்தாலும் உணவு பழக்க வழக்கங்களில் சத்து குறைவான உணவுகளை சாப்பிட்டால் நமது உடலில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும். நரம்புகளில் மூன்று வகை உள்ளன தனியக்க நரம்புகள், மோட்டார் நரம்புகள், உணர் திறன் நரம்புகள் ஆகும்.
நரம்புகள் இழுத்தல்லுக்கான அறிகுறிகள்:
பக்கவாதம் வருவதற்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது இந்த நரம்பு இழுத்தல் தான். அதை முன்னதாகவே கண்டறிந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்டால் வருவதற்கு முன்பே குணமடைந்து விடும். நரம்பு விளைச்சலுக்கான அறிகுறிகள், சிறுநீர், மலம் கழிப்பதில் சிரமம் அடைவது, அதிகமாக வேர்வை வருவது உணவுகளை சாப்பிடும் போது முழுங்குவதில் கஷ்டப்படுவது. கை கால்கள் செயலிழந்து விடுவது, கூர்மையான நரம்பு வலி, இடுப்பு கை கால்கள் இழுத்து பிடித்தல், கை கால்கள் கட்டுப்பாடு இழத்தல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்சினை உடலில் ரத்த அழுத்தம் அதாவது குறைவாக ரத்தம் இருப்பது. கண் பார்வையில் பிரச்சனை போன்றவை நரம்பு இழுத்தலுக்கான அறிகுறிகள்.
கால் நரம்புகள் இழுத்தல் காரணம்:
முக்கியமாக இரவு நேரங்களில் பல பேருக்கு கால் நரம்புகள் என்பது இழுக்கும். அதற்குக் காரணம் என்ன? என்று உங்களுக்கு தெரியுமா? இதை இரவு நேரம் பிடிப்புகள் என கூறப்படுகின்றன. இரவு நேரம் நரம்பு இழுத்தல் வருவதற்கு முன்பாக எந்த ஒரு அறிகுறியும் இருக்காது, அவை எந்த எச்சரிக்கையும் இல்லாமல் திடீரென நிகழும். இந்த நோயானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடும். நரம்பு பிடிப்புகள் வந்தால் ஒரு சில நொடிகள் முதல் ஒரு சில நிமிடங்கள் வரை நீடிக்கும் ஆனால் கடுமையாக இருக்கும். கடுமையான நரம்பு இழுத்தில் வந்தால் அடுத்த நாள் வரக்கூட வாய்ப்பு உள்ளது. உடலில் நீர் இழப்பு கம்மியாக இருந்தால் அதாவது உடலில் திரவங்களுக்கு கம்மியாக இருந்தால் கால் நரம்புகள் இழுக்கும். ரத்த ஓட்டம் கம்மியாக இருப்பது அதிகமாக வேலை செய்வது நின்று கொண்டே இருப்பது போன்ற காரணங்களால் வரும் அது மட்டும் அல்லாமல் கர்ப்ப காலங்களிலும் இதுபோன்று நடப்பது உண்டு. உடலை எப்போதும் ஆரோக்கியத்துடனும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதும் நல்லது.
நரம்பு இழுத்தல் குணமாக என்ன செய்ய வேண்டும்?
புகை மற்றும் குடிப்பழக்கம் நபராக இருந்தால் உடனடியாக அதை நிறுத்த வேண்டும். ரத்தத்தை சோதனை செய்து நீரிழிவு நோய் இருந்தால், ரத்த சர்க்கரையை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மன அழுத்தம், வலி, தியானம் ,குத்தூசி வைத்தியம் போன்றவை செய்ய வேண்டும். நரம்பை சேதப்படுத்தும் வேலைகள் மருந்துகள் போன்றவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும். நரம்பு அதிர்ச்சி தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்வது. ஆக்ஸிஜனேற்ற போன்ற வைட்டமின்களை எடுக்க வேண்டும். இதை செய்வதோடு மட்டும் இல்லாமல் முக்கியமாக நமது உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் நாம் என்னென்ன உணவுகள் சாப்பிட்டால் நரம்பு இழுத்தல் சரியாகும் என்று கீழே பார்ப்போம்.
நரம்புகள் இழுத்தல் குணமாக என்ன சாப்பிட வேண்டும்.
நோய் வந்த பின்பு சிகிச்சை அளிப்பதை விட வருவதற்கு முன்பே தடுப்பது தான் நல்லது. ஆதலால் இயற்கையில் கிடைக்கும் மெக்னீசியம் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் நீங்கள் துடிப்பாகவும் உடலை கட்டுப்படுத்தும் உற்சாகமாகவும் முகத்தின் அழகை அதிகரிக்கவும் உதவுகிறது. இது போன்ற உணவுகள் நமது வீட்டிலே கிடைக்கும் அதை சாப்பிடுவதன் மூலம் ஆறு இறைத்துடன் இருக்க முடியும் அது என்னென்ன உணவுகள் என்று பார்ப்போம்.
- தினமும் பாதம் சாப்பிட்டு வந்தால் இதை ஆரோக்கியமாக இருக்கும் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
- பூசணி விதைகள் சியா விதைகள் தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமான ஆரோக்கியம் இதே ஆரோக்கியம் எலும்பு மற்றும் நரம்புகள் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கும் இரவு நேரங்களில் தூக்கத்தை மேம்படுத்தும்.
- முந்திரி மற்றும் பருப்பு வகைகள்,இதில் மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்து இருப்பதால் உடலுக்கு நல்லது தரும். பருப்புகளில் நார்ச்சத்து போலெட் மற்றும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இது இதயத்திற்கு ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
- நாம் அன்றாட வாழ்வில் சாப்பிடும் அரிசியை விடுத்து பிரவுன் ரைஸ் சாப்பிடுவது நல்லது ஏனெனில் இதில் அதிகமான நாட்கள் சுத்தும் ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் உள்ளன. கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் கூட இதை சாப்பிடலாம். கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இது மிகவும் உதவுகிறது.
ஓட்ஸ் மற்றும் கீரை, வாழைப்பழம், அத்திப்பழம், போன்ற உணவுப் பொருட்களை தினத்தோறும் சாப்பிட்டு வந்தால் நரம்பு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் ஓரிரு வாரங்களில் குணமடைந்து விடும். இவை அனைத்தையும் கடைப்பிடியுங்கள் நரம்புகளுக்கு போன்ற அந்த ஒரு வியாதையும் உங்களுக்கு வராது.