வீட்டில் எறும்பு வராமல் தடுப்பது என்பது ஒவ்வொரு வீட்டிலும் பொதுவான கேள்விகளில் ஒன்றாகும். ஒவ்வொரு வீட்டிலும் அதிகபட்சமாக 10 ஆயிரம் எறும்புகள் இருக்கும். எறும்புகளில் செத்தெறும்புகள், கருப்பு எறும்புகள், சிகப்பு எறும்புகள், கட்டெறும்புகள், கொடுக்கு எறும்புகள், என உலகில் 10 மில்லியன் மேற்பட்ட எறும்புகள் உள்ளன. அதில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட எறும்பு இனங்களும் இருக்கின்றன. அது வீடுகளில் காணப்படும் சிகப்பு எறும்புகள் சாமி எறும்புகள் எனவும் ஒரு சில பேர் கூறுவர். மனிதர்களிடையே கருப்பு எறும்புகள் தான் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, வீடுகளில் முடிந்தவரை எறும்புகள் வராமல் தடுப்பது நல்லது. சில வீட்டின் உபயோகப் பொருட்களைக் கொண்டு எறும்புகள் எப்படி வீட்டிற்குள் வராமல் தடுப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் எறும்பு வர காரணம் என்ன?
சமையலறையில் சாப்பிட்ட பின்பு நாம் விட்டு செல்லும் உணவு துகள்களின் மணத்தை நன்கு உணரும் திறன் கொண்டவை எறும்புகள். உணவு மேஜை போன்ற இடங்களில் சிதறிய உணவு துகள்கள், சர்க்கரைகள், தேன் போன்ற இனிப்புகள் எல்லாம் எறும்புகளை துல்லியமாக ஈர்க்கும். மனிதர்களுக்கு மட்டும் தண்ணீர் முக்கியம் கிடையாது எறும்புகளுக்கும் தண்ணீர் என்பது இன்றியமையாத ஒன்று. குடிநீர் தொட்டிகள், விரிசல்கள், தண்ணீர் குழாய் கசிவுகள் எறும்புகளை வரத் தூண்டும். வீட்டில் உள்ள கதவுகள், ஜன்னல்கள், தழைத்தளங்களில் உள்ள விரிசல்களில் எறும்புகள் எளிமையாக நுழைந்து உள்ளே வந்துவிடும். வீட்டின் அருகில் உள்ள தாவரங்கள் குப்பைகள் போன்றவை கூட எறும்புகள் உள்ளே வர காரணமாக அமைகின்றன. கோடை காலங்களில் கூட வெயில் தாங்க முடியாமல் குளிர்ச்சியான இடத்திற்கு எறும்புகளின் படை வீட்டை நோக்கி வரும்.
எறும்பு எப்படி கடிக்கும்.
இங்கு பலரது பிரச்சினையாக இருப்பது எறும்பு தான். நம்ம உணவை சாப்பிடுவதில் ஆரம்பித்து கடிப்பது வரை பல வகைகளில் நம்மளை தொந்தரவு செய்கிறது. எறும்பு மனிதனை கடிக்கும் போது தோளில் ஃபார்மிக் அமிலத்தை வெளிவிடுகிறது. இது ஒவ்வாமை போன்ற எதிர்ப்பினையை உண்டாக்கும். எறும்பு கடிப்பது சாதாரணமாக நினைக்க கூடாது அசாதாரணமானது என்றாலும் அது ஆபத்தானது. கடுமையான ஒவ்வாமைக்கு உட்பட்டால் படை நோய், வயிற்றுப்போக்கு, மார்பில் இறுக்கம், மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை அல்லது நாக்கு வீக்கம். போன்றவை உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும். எறும்பு கடித்த பின்னர் அதோட அறிகுறிகள், தழும்புகள், வீக்கம் போன்றவை பத்து நாட்களுக்கு மேலாக நீடித்தால் கண்டிப்பாக டாக்டரை அணுக வேண்டும்.
வீட்டில் எறும்பு வராமல் தடுக்க
நீங்கள் வீட்டில் சாப்பிட்டு முடித்த பின்பு கீழே விழும் உணவுத் துகள்களை நன்றாக பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். சமையலறை உணவு சாப்பிடும் மேஜைகளை அடிக்கடி நன்றாக தூய்மைப்படுத்துவது நல்லது.
வீட்டின் குழாய்களில் இருக்கும் தண்ணீர் கசிவுகளை சரி செய்ய வேண்டும். வீடுகளில் உள்ள விரிசல்கள் ஓட்டைகள் போன்றவற்றை நன்கு பார்த்து அடித்து விட வேண்டும். நீங்கள் வளர்க்கக்கூடிய தாவரங்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்துதல்.
உப்பு: நாம் தினந்தோறும் பயன்படுத்தும் உப்பை தண்ணீரில் கரைத்து எறும்புகள் செல்லும் பாதையில் ஊற்றினால் எறும்புகளின் பாதைகளை உப்பு மட்டுமல்லாமல் பேக்கிங் பவுடரும் இதே தந்திரத்தை செய்யும்.
சாக்பீஸ்: தற்போது அனைவரும் அதிகமாக எறும்புகளை விரட்டுவதற்கு பயன்படுத்துவது இந்த சாக்பீஸ் தான். சாக்கில் உள்ள கால்சியம் கார்பனேட். இருப்பதால், எறும்புகள் இருக்கும் இடத்தில் கோடு கிழியுங்கள். இது எறும்புகளை வரவிடாமல் தடுக்கிறது, ஆனால் இந்த கோடுகள் வீட்டில் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும்.
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு: எறும்புகள் விரிசல்களின் வழியாக நுழையும் பாதையில் எலுமிச்சை பழத்தின் சாற்றை சற்று பிழிந்து விடுங்கள். நீங்கள் வீட்டின் தரையை கழுவும் போது சற்று தண்ணீரில் எலுமிச்சை சாற்றை பிழைந்து சுத்தப்படுத்தவும். எலுமிச்சைப் பழத்தில் கசப்பான புளிப்பு நிறைந்த அமிலம் இருப்பதால் எறும்புகள் அந்த இடத்திற்கு மீண்டும் வராது. அது மட்டும் இல்லாமல் இதே போன்று ஆரஞ்சும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கப் வெதுவெதுப்பு தண்ணீரில் ஆரஞ்சு தோலை போட்டு அதை அரைத்து பேஸ்ட் போல எங்க, எங்க எறும்புகள் இருக்கோ அந்த இடத்தில் வைத்து அடைத்தால் எறும்புகள் வராமல் தடுக்க முடியும்.
மிளகு மற்றும் பட்டை: எந்த அளவுக்கு சர்க்கரையை எறும்புகளுக்கு பிடிக்குமோ! அந்த அளவுக்கு மிளகு பயத்தை தரும். எறும்புகள் இருக்கும் இடத்தில் மிளகுத்தூளை தூவுங்கள் அல்லது மிளகுத்தூளை தண்ணீரில் கலந்து எறும்புகள் இருக்கும் இடத்தில் தெளித்து வந்தால் எறும்புகள் சாகவில்லை என்றாலும் வீட்டிற்குள் வராமல் தடுக்க முடியும். இது போன்று பட்டையும் உங்களுக்கு எறும்புகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கு பயன்படுகிறது. பட்டை மட்டும் லவங்கம் நல்ல நறுமணம் தருவதோடு மட்டுமல்லாமல் எறும்புகளை வீட்டிற்க்குள் அண்ட விடாமல் தடுக்கிறது. பட்டை இயற்கையாகவே எறும்பு விரட்டியாக பயன்படுத்தப்படுகிறது.
புதினா: இயற்கையான பூச்சி விரட்டி புதினா ஆகும். எறும்புகளுக்கு புதினாவின் வாசனைகள் பிடிக்காது, அதனால் எறும்புகளை விரட்ட புதினா பயன்படுகிறது. ஒரு கப் தண்ணீரில் புதினா சாற்றை பிழைந்து விட்டு அதனுடன் எசன்ஷயல் கலந்து தினமும் வீட்டை சுற்றி விரிசல் போன்ற இடத்தில் இரண்டு முறை தெளித்து வந்தால் எறும்புகள் ஓடியே ஓடிவிடும்.
எறும்புகளை முற்றிலும் ஒழிப்பது என்பது மிகவும் கடினம், இருந்தாலும் மேற்கண்ட வழிகளை பின்பற்றினால் வீட்டில் எறும்புகள் வராமல் தடுப்பதோடு குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும்.