முனீஸ்வரன் கனவில் வந்தால் பலன்கள். உலகின் பல பேருக்கு முனிஸ்வரன் சாமி குல தெய்வமாக வழிபாடுகள் செய்து கும்பிட்டு வருகின்றன. சிவபெருமானின் அம்சமாக கருதப்படும் தெய்வம் முனிஸ்வரன். ஈஸ்வரனாக இருந்த ஞானத்தை வழங்கியவன் முனீஸ்வரன் என்று குறிப்பிடப்படும். முனீஸ்வரனை வணங்குபவர்கள் முனிஸ்வரன், முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்கள் வைத்து உள்ளன. ரிக் வேதத்தில் முனி என்ற சொல் தெய்வ ஆவேசம் படைத்தவர் பயம் இல்லாதவர் என்று கூறப்படுகிறது.
முனீஸ்வரன் பெரிய முகம் அடர்த்தியான மீசை, தலைக்கவசம் மற்றும் டேஸ்டி நகைகள், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தனது இரு கைகளிலும் பெரிய அருவாக்கள் ஏந்தியவாறு பெரிய மனிதராகவும் வலுவான மனிதராகவும் அமர்ந்து அல்லது நின்று கொண்டிருப்பார். பார்ப்பதற்கே பயமாகவும் ரம்யமாகவும் இருக்கும்.
முனீஸ்வரன் கனவில் வந்தால் பலன்கள்:
நம் தூங்கும்போது பெரும்பாலும் வரும் கனவுகள் காலையில் நமக்கு நினைவுகள் இருப்பதில்லை சில கனவுகள் மட்டுமே நமது நினைவில் இருக்கும் அவை நல்லதாகவும் கெட்டதாகவும் இருக்கலாம். நமது கனவுகளுக்கு அர்த்தம் உள்ளது என்று ஜோதிடம் கூறுகிறது. அவ்வகையில் நம் கடவுளாகவும் குலதெய்வமாகவும் வணங்கும் முனீஸ்வரன் கனவில் வந்தால் நல்ல விஷயம் தான் நீங்கள் நினைத்த காரியம் மனதளத்துடன் செயல்பட வேண்டும் என்பதை இது குறிக்கிறது. ஏதேனும் முதலீடு மற்றும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
முனீஸ்வரன் ஆடுவது போல் கனவு கண்டால்:
நீங்கள் ஏதேனும் உங்கள் வாழ்க்கையில் ஒரு செயல்களை செய்வதற்கு திட்டம் தீட்டி வைத்திருக்கும் பட்சத்தில். அதை நீங்கள் கால அவகாசம் கொடுக்காமல் உடனடியாக அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் முதலடி எடுத்து வைக்க வேண்டும் அப்படி சாமி ஆடுவது போல் கனவு கண்டால் அது ஒரு நல்ல கனவாகும் உங்களுக்கு எதிர்காலம் நல்லதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சாமி கும்பிடுவது போல் கனவு வந்தாலும் இறைவனை காண்பது போல் கனவு வந்தாலும் அடுத்த நாளே அந்த கோயிலுக்கு சென்று பூஜைகள் செய்து கடவுளை வணங்க வேண்டும்.
தனியாக இருக்கிற மாதிரி கனவு வந்தால்:
உங்களுக்கு சம்மதமே இல்லாத இடத்தில் நீங்கள் மட்டும் இருந்து வேறு யாரும் இல்லை ஒரு இரண்டு இடத்தில் இருக்கிறீர்கள் என்றால் இந்த மாதிரி கனவு வந்தால் புருவ ஜென்மத்தில் அந்த இடத்திற்கு உங்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்க வாய்ப்புள்ளது உங்களுக்கு பிறந்த காலத்தில் ஏதேனும் அந்த இடத்தில் பிரச்சனை நடந்திருக்கும். அதுவே நீங்க ஒரு கோவிலில் இருந்தால் உங்களுக்கு இனிமே வரும் காலங்களில் தெய்வங்களின் அருள் கிடைக்கும் நீங்கள் நம்பிக்கையாக இருங்கள் என்று அர்த்தம்.
கருப்புசாமி காவல் தெய்வம் கனவில் வந்தால்:
கருப்புசாமி என்றாலே ஊருக்கு எல்லையில் இருப்பவர். ஊரினுடைய காவலர் என்றும் கருதப்படும் கடவுள். கருப்புசாமி கனவில் ஆடுவது போல் கனவு கண்டால் அது ஒரு நல்ல கனவு தான் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்காலத்தை செய்ய போறோம் செயல்களை செய்ய கனவுக்கண் கொண்டிருந்தால் அதை இனிமே கனவுகண்டு கொள்ளாமல் உடனடியாக செயல்படுத்தினால் உங்களுக்கு நல்லது.
அதுவே கருப்புசாமி மட்டும் கனவில் வந்தால் உங்களுக்கு ஏதேனும் தொழில் ரீதியாகவும் உறவினர்கள் ரீதியாகவும் உங்களுக்கு பிரச்சனைகள் வரலாம் பகைவர்கள் மட்டும் எதிரிகளை உங்களை முதுகில் குத்தப் போகிறார்கள் என்று இது குறிப்பிடுகிறது இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம் உங்களுக்கு மனம் தைரியத்தை அதிகப்படுத்தி எப்பேர்பட்ட சவால்களையும் எதிர்கொள்ள தைரியத்தை கொடுக்கிறார் கருப்புசாமி.
முனீஸ்வரனை வழிபடுவது எப்படி:
பல வைஷ்ணவ குடும்பங்களில் முனீஸ்வரனை பல தலைமுறைகளாக தமிழ்நாடு மட்டும் கர்நாடகா மாநிலங்களில் குலதெய்வமாக வெளிப்பட்டு வருகின்றன. முனீஸ்வரன் என்றாலே சக்தி ஞானம் அறிவு மற்றும் பாசம் ஆகிவற்றிற்கு உரிமையானவர். முனீஸ்வரனே வணக்கம் அவர்கள் அமைதியான கடவுளாகவும் கடுமையான கடவுளாகவும் வணங்குகின்றன. அமைதியான கடவுளாக வணங்குபவர்கள் மக்கள் பூக்கள், பழங்கள் மற்றும் அதிகமான உணவு பொருட்கள் வைத்து அதன் வடிவத்தை வணங்குகின்றன. வணங்கிய பின்னர் அந்த உணவுகளை பிரித்து சாப்பிடுவதும் வழக்கம். அதுவே கடுமையான கடவுளாக வணங்கப் போவார்கள் வெறும் பூ பலன்கள் உணவுகளோடு நிறுத்திக் கொள்ளாமல் கோழி ஆடு என்ற உயிரினங்களையும் கடவுளுக்கு பலியிட்டு காணிக்கை செலுத்தி வெளிப்படுகின்றன.
முனீஸ்வரன் அருவா கனவில் வந்தால்:
முனீஸ்வரன் என்றாலே துடிப்பானவர். யாருக்கும் பயப்படாதவர். அவர் கையில் பெரிய அருவா வைத்திருப்பார். அந்த அருவானது தீமைகள் செய்பவர்களையும், கெட்டதை விடுவிக்கும் நபர்களையும் பலியிடுவதற்காக வைத்திருப்பார். அந்த அருவானது மிகவும் பெரியதாகவும் பயமாகவும் இருக்கும். அருவா, முனீஸ்வரன் கனவில் வந்தால் ஏதேனும் உங்களுக்கு தீமைகள் வரப்போகிறது என்று அர்த்தம் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.
கடவுள் கனவில் வந்த பின் செய்ய வேண்டியவை.
நீங்கள் போய்க் கொண்டிருக்கும் போது முனீஸ்வரன் கனவில் வந்தால் இறைவனின் முகம் அல்லது இறைவனை காண்பது போல் கனவு வந்தாலும் நீங்கள் உடனடியாக போய் சென்று பரிகாரங்கள் செய்ய வேண்டும். ஏதேனும் உங்களின் நேர்த்திக் கடன் செலுத்தாமல் இருந்திருந்தால் அதை தாமதப்படுத்தாமல் உடனடியாக செலுத்த வேண்டும் கனவுகளில் கடவுள் வருவது கெட்ட சகுனம் கிடையாது. நீங்கள் கைகூப்பி சாமி கும்பிடுவது போல் கனவு வந்தால் கோவிலுக்கு சென்று அங்குள்ள பக்தர்களுக்கு கலவை சாதங்கள் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் போன்றவற்றை தானமாக போட வேண்டும்.