பல்லி விழுந்தால் என்ன ஆகும் தெரியுமா? பல்லி என்பது ஒரு ஊர்வன வகை உயிரினமாகும். அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடியது . பல்லி என்றாலே பல பேருக்கு இங்கு பயம். அதை விரட்டும் வரை நடுங்கிக் கொண்டிருப்பார்கள். நம்முடைய வீட்டை மற்றும் பாத்ரூம்களை நமக்கே தெரியாமல் ஷேர் செய்து வாழும் ஜீவன்கள் பல்லி ஆகும். வீட்டிற்கு வரும் கொசு பூச்சி போன்றவற்றைத் தின்று நமக்கு நன்மையை தரும். பெரும்பாலும் சுவரில் தெரிந்து கொண்டிருக்கும்.
பல்லிகளில் மர பல்லி, வீட்டு பல்லி காட்டுப்பல்லி, சாலமண்டல் பல்லி என்ன பல வகைகள் உள்ளன. அந்த வகையில் நமது உடம்பின் மேல் பல்லி விழுவதை வைத்து நிறைய பலன்கள் இருக்கின்றன. கௌரி சாஸ்திரம் பண்டைய காலங்களில் பல்லியை பற்றி கூறுகின்றன. பல்லி கத்துவதால் மற்றும் விழுவதால் மனிதர்களுக்கு நல்ல சகுனங்களையும் கேட்ட சகுனங்களையும் பல்லியின் வழியாக கடவுள் சொல்கின்றன என மக்கள் நம்புகின்றன. பல்லியை கர்நாடகா மாநிலத்தில் சில பேர் கடவுளாகவும் வெளிப்படுகின்றன.
பல்லி விழுந்தால் பலன்கள்:
பல்லி என்பது நமது வீட்டிலே வாழ்வதால், நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் இல்லை வேலை செய்து கொண்டிருக்கும் போதும் நமக்கே தெரியாமல் பல்லி நமது மேல் விழுந்து விடும். அப்படி விழுந்தால் அதற்கு என்ன பலன்? நல்லதா கெட்டதா? எங்கெங்கு விழுந்தால் என்ன பலன்கள் நிகழும் என்று முன்னதாகவே நமது முன்னோர்கள் எழுதி விட்டு சென்று இருக்கின்றன. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். உங்கள் மீதும் பல்லி விழுந்திருந்தால் அதற்கான பலன்களும் என்ன என்பதை இந்த பதிவில் உங்களுக்கான பதில் கிடைத்துவிடும்.
பல்லி ஆண்கள் மேல் விழுந்தால் என்ன காரணம்:
ஆண்கள் மீது பல்லி விழும் போது வலது பக்கத்தில் விழுந்து இருந்தால் அவர்களுக்கு நன்மையும் அதிர்ஷ்டமும் வரும் அதுவே உடலில் இடது பக்கத்தில் விழுந்திருந்தால் கெட்டது நடக்கும் கெட்ட சகுனம் வரும் என்று கௌரி பஞ்சாகத்தில் கூறப்பட்டுள்ளது. தலையின் மேல் பல்லி விழுந்தால் மரணம் நிகழும் என்று கூட கூறுகின்றன ஆனால் அது தவறு. பல்லி தலையில் வலது பக்கம் இருந்தால் வீட்டில் தேவையற்ற பிரச்சனை நீங்களும் என்று அர்த்தம் சண்டை மட்டும்தான் வரும். தலையில் வலது பக்கத்தில் கழுத்துக்கு மேல் பல்லி விழுந்தால் சகோதரர்களே ஏதேனும் பிரச்சினை உண்டாகும்.
பல்லி விழும் பலன்கள் பெண்களுக்கு:
நடுமண்டையில் பெண்களுக்கு விழுந்தால் அது மரண பயத்தை காட்டப் போகிறது என்று அர்த்தம். வேறு பக்கத்தில் இருந்தால் அவர்களுக்கு நோய் ஏதும் வரப்போகிறது என்று கூறுகிறது. கைகளின் மேல் விழுந்தால் உங்களுக்கு பண வரவுகள் உருவாக வாய்ப்பு உள்ளது நீங்கள் முதலீடு செய்ததில் லாபம் அடைவீர்கள். முதுகின் மேல் பல்லி விழுந்தால் அவர்களுக்கு மரண செய்தி ஏதேனும் வர வாய்ப்புள்ளது. பெண்களின் காது மற்றும் உதடுகளின் மேல் விழுந்தால் நீங்கள் ஏதேனும் அவமானங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது சூழல் உருவாகும். அதுவே இடது கண்களில் மேல் விழுந்தால் நீங்கள் விரும்பும் நபர் உங்களையும் நேசிக்கிறார் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று குறிக்கிறது. பெண்களின் தொடை மற்றும் கால்களின் மீது விழுந்தால் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான சூழ்நிலை கூடிய விரைவில் உருவாகும் என்று கூறுகிறது.
பல்லி வலது கை மேல் விழுந்தால் பலன்கள்:
நமது உடலில் உள்ள வலது கையின் மேல் பல்லி விழுந்தால் அது நமக்கு நன்மையை தராது நமது உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம் இல்லை அன்றைய தினம் நமக்கு ஏதேனும் உடல்நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தமாகும்.
இடது கையின் மேல் விழுந்தால் பலன்கள்:
பள்ளி இடது கை மேல் விழுவது நமக்கு ஒன்றும் கெட்ட செய்தியை தராது. நம்ம கேட்டது கையில் விழுவதன் மூலம் வெற்றி கிடைக்கும். நீங்கள் ஏதேனும் பிரச்சினையில் ஈடுபட்டிருந்தால் அதற்கான நல்ல விஷயம் உங்களை வந்து சேரும் வலது மணிக்கட்டில் விழுந்தால் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் மார்பில் பள்ளி விழுந்தால் லாபம் மற்றும் சுபம் ஏற்படும்.
தலையின் மேல் விழுவதும் பலன்கள்:
பலி விழுவதில் மிகவும் துன்பமான விஷயம் என்றால் தலையின் மேல் விழுவது தான். காலங்காலமாக வெள்ளியானது தலையில் விழுந்தால் குடும்பத்தில் ஏதேனும் மரணம் நிகழலாம் என்று கூறுகின்றன ஆனால் அது ஒரு தவறான விஷயம். பல்லி விழும் அதன் மூலமாக மட்டுமே மரணம் நிகழ்வது இல்லை குடும்பத்தில் ஏதேனும் சண்டை பிரச்சனைகள் நிகழும் ஏற்கனவே உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு இருப்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு மரணம் வர மிகவும் குறைவான வாய்ப்பு உள்ளது.
முகத்தில் மட்டும் உடலில் விழுவதன் பலன்:
பல்லி விழுந்தாலே கெட்ட சகுனம் என்றும் நினைக்கும் பலர். நல்ல விஷயம் நடக்கும் என்று நினைத்து கூட பார்ப்பதில்லை. நெற்றியின் மேல் விழுந்தால் பெரும் புகழும் பணமும் பிரச்சினையும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் அடுத்தவர்களிடம் கொடுத்த கடன் அனைத்தும் உங்களிடம் வந்து சேரும். முகத்தின் மேல் பல்லி விழுந்தால் உங்களுடைய உறவினர்கள் நண்பர்கள் சகோதரர்கள் அனைவரும் வீடு தேடி வருகை தருவார்கள்.
உடலில் உள்ள கழுத்தில் பல்லி விழுந்தால் உங்களுக்கு ஏதேனும் பகை ஏற்படலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் மார்பில் பல்லி விழுந்தால் பொதுவாக இது அதிர்ஷ்டம் என்று கூறப்படுகிறது திடீரென அதிர்ஷ்டமும் ஏற்படும் வலது பக்க மார்பில் லாபமும் கிடைக்கும் இடது மார்பில் விழுந்தால் அமைதியான மற்றும் சுகமான வாழ்க்கை கிடைக்கும். வயிற்றின் மேல் விழுந்தால் அது உங்களுக்கு நல்ல பலனை தான் தரும் பொன் பொருள் உங்களை வந்து சேரும்.
அதுவே உங்கள் கன்னம் அல்லது கண்களில் பல்லி விழுந்தால் ஏதோ ஒன்றுக்கு நீங்கள் பயப்பட வேண்டும் இல்லை என்றால் தண்டிக்கப்படுவீர்கள் என்று கூறப்படுகின்றன. காலில் உள்ள பாதத்தில் விழுந்தால் நீங்கள் வரும் காலங்களில் வெளிநாடு பயணங்கள் செல்ல போகிறிர்கள் என்று குறிப்பிடுகிறது.
பல்லி விழுந்த பின்பு செய்ய வேண்டியவை:
பல்லி உங்கள் மீது விழுந்து விட்டால் நல்ல சகுனமோ கெட்ட சகுனமோ அதை பொருட்படுத்தாமல் நீங்கள் உடனடியாக குளிப்பது நல்லது குளித்த பின்பு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள். மேலும் வீட்டில் அல்லது கோயிலில் விளக்கெண்ணை கொண்டு விளக்கேற்றினால் இன்னும் நன்று. இல்லையெனில் நீங்கள் ஏதேனும் கோயிலுக்கு செல்ல வேண்டுமென்றால் நான் உங்களுக்கு அறிவுறுத்துவது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் வள்ளியால் செய்யப்பட்ட சிலை ஒன்று உள்ளது. அங்கு சென்று வாருங்கள் அங்குள்ள பல்லியை தொற்று வழங்கினால் உங்களுக்கு மேலும் நல்ல காலங்கள் ஏற்படும்.