சென்னை வெள்ளம் இருந்து தப்பிக்க, சென்னையில் டிசம்பர் மாதம் நெருங்கினாலே மிகவும் ஆபத்தான காலங்களாக கருதப்படுகிறது. ஏனென்றால் அக்டோபர் நவம்பர் டிசம்பரில் மழைக்காலம் என்பதால் இயற்கை சீற்றம் அல்லது அதிகமான மழை பெய்வதால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறி மக்களே மிகவும் அச்சுறுத்துகிறது. இதனால் சென்னையில் வாழும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றன. சாப்பிடுவதற்கு சாப்பாடு இல்லாமல் துணிமணி இல்லாமல் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றன. எனவே சென்னையில் வெள்ளம் வரும் போது இனிமேலவது எப்படி நம்மளை பாதுகாத்துக் கொள்வது. வெள்ளத்திலிருந்து தப்பிக்க நாம் முன்னெச்சரிக்காக என்னென்ன செய்ய வேண்டும். என்பதை பதிவில் நாம் இப்போது தெளிவாக பார்ப்போம்.
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை:
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் கடுமையாக சென்னை பாதிக்கப்பட்டிருந்தது. சென்னை பாதி இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மூன்று நாட்கள் மேலாக மக்கள் வெளியே வர முடியாமல் உணவு குடிநீர் மின்சாரம் எதுவும் இன்றி குழந்தைகள் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் நெஞ்சளவு ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தவித்தனர். இதை அனைவரும் நாம் காணொளி பார்த்து மிகவும் வேதனை அடைந்தது உண்டு. சென்னை வெள்ளம் தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார் அவர்களும் பிற மாவட்ட மக்களும் மிகவும் உதவி செய்து ஆறுதல் அளித்தனர். வரலாறு காணாத கனமழை சென்னையில் பெய்தால் மழை நீர் வடித்தால் ஏரி குட்டைகள் அனைத்தும் நிரம்பி சென்னை சிட்டிக்குள் நீரானது வந்தது. நிறைய வீடுகளில் முதல் அடுக்கு வரை வெள்ளை நீரானது வந்து மக்களை மிகவும் அட்சயத்தில் உள்ளாக்கியது அந்த வீடியோக்களை நமது இணையதளங்களில் நாம் பார்த்திருப்போம்.
வெள்ளம் வருவதற்கு முன் செய்ய வேண்டியவை:
வெள்ளம் வருவதற்கு முன்னரே கவர்மெண்ட் ஆனது நமக்கு எச்சரிக்கை கொடுக்கும். அப்போது நீங்கள் இருக்கும் இடம் பாதுகாப்பானதா? மழை பெய்தால் உங்கள் வீட்டில் நீரானது வருமா வராதா என்று பார்க்க வேண்டும். உங்கள் வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் ஏனென்றால் வெள்ளம் ஏற்பட்டு நீரானது வாகனத்திற்குள் சென்றாள் அதை பழுது படுத்தும் செலவு உங்களுக்கு அதிகமாக வைக்கும். தாழ்வான பகுதிகள் நீங்கள் இருந்தால் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். தேவ இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மழைக்காலங்களில் வெளியே செல்வதும், வேலை, கல்லூரி பள்ளிகளுக்கு செல்வதும் ஏற்றது அல்ல. வெளியே சென்றாள் மின்கம்பிகள் பழுதடைந்து கீழே விழுந்திருக்கும் அதை தெரியாமல் மிதித்தால் நமது உயிர் போகக்கூட வாய்ப்புள்ளது. அதனால் வீட்டுக்குள் இருப்பதே பாதுகாப்பானது..
பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வது.
சென்னை வெள்ளம் ஏற்பட்டால் அடுத்த நாள் எந்த கடைகளும் திறந்திருக்காது. நீங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அதற்கு மேல் கூட வீட்டுக்குள்ளே இருக்கும் வாய்ப்பு ஏற்படலாம். ஆதலால் அதற்கு முன்னதாகவே வெள்ளம் வரப்போகிறது என்ற செய்தி கேள்விப்பட்டால் உங்களுக்கு தேவையான பால், அரிசி, தண்ணீர், காய்கறிகள், சிலிண்டர், போன்றவற்றை முன்னதாகவே வாங்கி வைத்திருப்பது நல்லது.
மின்சாதன பொருட்கள்:
சென்னை வெள்ளம் மற்றும் மழைக்காலங்களில் மின்சாதனப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று நமது முன்னோர்கள் கூறுவது வழக்கம் அது என்னதான் உண்மையாக இருந்தாலும், வெள்ளம் மற்றும் மழைக்காலங்களில் உங்களுக்கு அந்த மின்சாதனங்கள் மிகவும் ஒரு பயனுள்ளதாக இருக்கும். வெள்ளம் வருவதற்கு முன்னரே உங்களிடம் இருக்கும்,மொபைல், பவர் பேங்க், போன்றவற்றிற்கு சார்ஜ் போட்டு வைத்திருப்பது நல்லது. மழைக்காலங்களில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உதவிக்கு 101, 112 எண்ணுக்கு உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் உங்களுடைய மொபைலில் சார்ஜ் இல்லை எனில் தொடர்பு கொள்ள முடியாது ஆதலால் உங்கள் மின்சாதனங்களை முன்னதாகவே எல்லாம் சரியா இருக்கா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
சென்னை வெள்ளம் பாம்புகள் வருவதை தடுக்க:
மழைக்காலங்களில் பூச்சிகள் மற்றும் விஷ உயிர் இனங்கள் மற்றும் பாம்புகள் வருவது சாதாரணமான ஒரு விஷயம் ஆகும். அவை அனைத்தும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. உங்கள் வீட்டில் பாம்புகள் வராமல் இருக்க பாம்புக்கு பிடித்த செடிகள் பூக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எலியில் பூச்சிகள் இருந்தால் கூட பாம்புகள் அதனை பிடிக்க வீட்டிற்கு வரும். வீடுகளை சுத்தமாகவும் எந்த ஒரு பூச்சி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பூனை நாய் போன்ற உயிரினங்களை உங்களது வீட்டில் வளர்த்து வந்தால் இந்த மழைக்காலங்களில் ஏதேனும் உயிரினம் வந்தால், நமக்கு முன்னாடி அது கண்டுபிடித்து நமக்கு ஏதேனும் அறிகுறிகளை கொடுக்கும்.
உங்கள் வீட்டிற்கு பாம்புகள் வந்தால் அதனை நீங்கள் அப்புறப்படுத்தாமல் அதனை துன்புறுத்தாமல் தீயணைப்பு துறைக்கு 044-22200335 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால் அவர்கள் அதை பாதுகாக்க பிடித்துக் கொண்டு சென்று விடுவார்கள்.உங்களுக்கு மழைக்காலங்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் காவல்துறை அல்லது தீயணைப்பு துறையை தொடர்பு கொண்டு உதவிகளை கேட்க வேண்டும்.
வெள்ளம் வந்த பின்பு செய்ய வேண்டியவை..
வெள்ளம் அதிகமாக சூழ்ந்திருக்கும் சூழலில் வெளியே செல்லும்போது நடந்து செல்லாமல் படகுகளை பயன்படுத்துவது நல்லது. நீங்கள் வாகனங்கள் மற்றும் வண்டிகளை உடனடி இயக்காமல் அதனை முழுவதும் கவனித்து அதில் பிரச்சனை இருக்கிறதா? இல்லையா? அதில் பாம்புகள், பூரான்கள், போன்ற நமக்கு தெரியாமல் ஒளிந்திருக்கும் அந்த மாதிரி ஏதேனும் இருக்கிறதா என்று கண்டுபிடித்து அதனை அப்புறப்படுத்த வேண்டும். இது எதுவுமே தெரியாமல் வாகனங்களை இயக்குவது நமது உயிருக்கு ஆபத்து.
சென்னை வெள்ளம் நிறைந்திருக்கும் இடங்களில் வாகனத்தில் செல்பவர்கள் வேகமாக செல்லக்கூடாது. ஏனென்றால் சாலையில் நிறைய பேர் சென்று கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்த கூடாது. உங்கள் வீட்டில் இருக்கும் மின்சாதனங்களை ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக இருக்குதா என்று பார்த்துவிட்டு அதை பயன்படுத்துவது நல்லது. உங்கள் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களும் நன்றாக உள்ளார்களா என்று விசாரித்துக் கொள்வது உங்கள் உறவுகளை மேலும் வளர செய்யும். உங்கள் வீட்டை சுற்றி நீர் அப்புறப்படுத்த பின்னர் ப்ளீச்சிங் பவுடர் போடவும். உங்கள் வீட்டையும் நன்றாக கழுவி சுத்தமாக வைத்திருப்பது உங்கள் குடும்பத்திற்கு அல்லது. மேற்கண்ட அனைத்து பதிவுகளையும் படித்து சென்னை வெள்ளகாலங்களில் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.